சில்லரை வர்த்தகத்தில் – பிஜிட்டல் (phygital)

டிஜிட்டல் என்ற காலகட்டம் மாறி பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் கலந்த ஒரு அனுபவத்தையே வரும் தலைமுறையினர்  ஸ்டோர்களில் எதிர்பார்ப்பார்கள். டாட்டா கிளிக் போன்ற நிறுவனங்கள் இது போன்றதொரு சேவைகளை தொடங்கி விட்டார்கள்.  எடுத்துக்காட்டாக ஒரு பெண்மணி தனக்கு தேவையான ஆபரணங்களை   ஸ்டோர்களில் சென்று தேர்வு செய்யும் பொழுது  அது தனக்கு எவ்வாறு இருக்கிறது என்பதனை விர்சூலாக பார்த்துக் கொள்ளலாம் மேலும் அது தொடர்பான பிற பொருட்களையும் அது ரெக்கமண்ட் செய்யும்.

கோவிட் காலகட்டங்களில் இதற்கான மாற்றங்கள் ஆரம்பித்து விட்டன. தற்போது  வாடிக்கையாளர்கள் பொதுவாகவே ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றை சார்ந்து உள்ளனர். மேலும் இதுவே நீடிக்கும் அல்லது பல்வேறு வகைகளில் உருப்பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிரிக் அண்ட் மார்டர்  எனப்படும்  சில்லறை நிறுவனங்கள் வருங்காலங்களில் அதிகமாக தொழில்நுட்பத்தை எதிர்நோக்கி செயல்பட வேண்டி இருக்கும்.

 ஆசியாவில் மட்டும் 30 லிருந்து 40 சதவீதம் வரை  தற்போதைய அழகு சாதன விற்பனை ஆனது ஆன்லைனில் நடைபெறுவதாக அறியப்படுகிறது. வருங்காலங்களில்  ஸ்டோர்களானது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான பிரத்தியேகமான அனுபவத்தை வழங்க வேண்டி இருக்கும்.. இதற்காக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்றவற்றை அது பயன்படுத்த வேண்டும், மேலும் தனது ஸ்டோர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைத்து யுக்திகளை வகுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஸ்டோர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வாசனை மற்றும் பாடல்கள் அல்லது விஷ்வல்கள் சரியான முறையில் ஏற்படுத்துவது வாடிக்கையாளர்கள் ஸ்டோரில் செலவிடும் நேரத்தில் அதிகரிக்கும்.  மேலும் ஒரு வாடிக்கையாளரின் விற்பனை அனுபவமானது சிறப்பாக இருக்க அவர்களின் பயன்பாடு வரை அவர்களுக்கு  உதவுவது தேவையாகும்.

விநியோக மையம் அல்லது டிஸ்டிரிபுயூசண் சென்டர்

விநியோக மையம் அல்லது டிஸ்டிரிபுயூசண் சென்டர் என்பது சில்லரை விற்பனையாளர் அல்லது  மொத்த விற்பனையாளருக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களை சேமித்து வைத்திருக்கும் இடமாகும்.

ஒரு பெரிய விநியோக மையம் சுமார் 10 ஆயிரம் லாரிகளில் உள்ள சர்க்குக்களை தேக்கி வைக்கும் அளவிற்கு பெரிய இடத்தினை கொண்டிருக்கலாம். இவை ஐம்பதாயிரம் சதுர அடி முதல் மூன்று மில்லியன் சதுர அடி வரை இருக்கும்.

முக்கியமாக பின்வரும் விதத்தில் விநியோக மையம் முக்கியத்துவம் பெறுகிறது:

  1. இருப்பினை சரியான அளவுகளில் வைத்திருப்பதர்க்காக (balance inventory)
  2. சரியான நேரத்தில் மறுநிரப்பல் (replenishment)
  3. இடத்தினை சரியாக பயன்படுத்துதல் (conserve space)
  4. விநியோக மையத்தில் திறமையான செயலாக்கம் இறுதி பயனருக்கு  வழங்கப்படும் பொருளின் இறுதி விலையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். (efficient processing in DC can impact the final cost of the product to the consumer)

டெஸ்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் (Click & Collect)

TESCO Billing counters

TESCO Billing counters Picture courtesy: Eleventh Earl of Mar’s

இந்த பதிவில் டெஸ்க்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் பற்றி பார்ப்போம். மளிகை சாமான்களுக்கு மட்டும் இந்த வசதி இன்று வரை 180 ஸ்டோர்களில் கிடைப்பதாக தகவல்.

இது போன்ற வசதிகள் இந்தியாவில் உள்ள பிக் பஜார், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றவற்றில் கொண்டு வந்தால் நிறைய நேரத்தை சேமிக்கமுடியும். முக்கியமாக நீண்ட நேரம் க்யுக்களில் நிற்பதை தவிர்க்கலாம். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று இப்போது பார்க்கலாம்:

1. வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ரேக்வச்டுகளை ஒருங்கிணைத்து அதற்கு தகுந்தாற்போல் பொருட்களை ஒழுங்குபடுத்தவேண்டும்.

2. பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர் வந்து வாங்கவிட்டால் அதற்க்கான கால நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. வாடிக்கையாளரின் ஆர்டரில் சில பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டியதாக இருக்கும் (ஏ.கா: காய்கறிகள், முட்டை, போன்றவை)

4. வாடிக்கையாளரின் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இட வசதி இருக்க வேண்டும்.

5. வாடிக்கையாளரின் ஆர்டரில் உள்ள பொருட்களும் பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களும் சரியாக இருக்கிறதா என்பதற்கான கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

CPG – நுகர்வோருக்காக தொகுக்கப்பட்ட பொருட்கள்

ஒரு வகை சராசரி நுகர்வோர் மூலம் ஒவ்வொரு நாளும் நுகரப்படும் பொருட்களை நாம் CPG(Consumer Packaged Goods) என்றழைக்கலாம்.  இந்த மாதிரியான பொருட்களை நுகர்வோர்கள் தினந்தோறும் அல்லது மிக குறுகிய நாட்களிலோ அல்லது வாரங்களிலோ செலவழித்துவிடுவார்கள். இந்த மாதிரியான  பொருட்களுக்கு துணிமணிகள், பேஸ்ட், சோப்பு , உணவு மற்றும் குளிர்பான வகைகளை கூறலாம்.

GS1 என்ற நிறுவனம் அமெரிக்காவில் CPG தரநிலைகளை வகுத்துள்ளது. இது CPG நிறுவங்களையும் பலசரக்கு ஸ்டோர்களையும் ஒன்றிணைக்க தேவையனவற்றை செய்கிறது. CPG நிறுவனங்கள் தங்களுடைய நுகர்வோர் தளத்தினை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.

UPC என்றால் என்ன ?

UPC – universal  product  code யுனிவர்சல் தயாரிப்பு கோட் (யூ.பீ. சி) பரவலாக அமெரிக்காவில், கனடா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட வகை பார்கோடு குறியியல்  ஆகும். கடைகளில்  வர்த்தக பொருட்களின்  தடமறிதல் பணயில் பயன்படுத்தப்படுகிறது.

பொருள் மற்றும் பொருள் விற்கும் விற்பனையாளர் இருவருக்கும் சில்லறை விற்பனையில் தனி அடையாளத்திற்காக ஒதுக்கப்படும் ஒரு தனிப்பட்ட 12 இலக்க எண்.யூ.பீ. சி பொதுவாக அதன் பார்கோடு அருகில் தோன்றும்.

ஈ.ஏ. / யூ.பீ. சி பயன்கள்:

1. அனைத்து பொருட்கள் ஒழுங்காக விற்பனை செயவதற்காக எந்த கட்டத்திலும்  அடையாளம் உறுதி செய்யவதற்காக 

2. வேகமாக  தரவு சேகரிப்பு

3. தரவினை வர்த்தக கூட்டாளிகள் மூலம் பயன்படுத்த முடியும்

By barcoderobot.com (http://www.barcoderobot.com/upc-a/036000291452/) [Public domain], via Wikimedia Commons

சில்லறை வணிகம் என்றால் என்ன ?

Retail flower shop in Varanasi – Photo By ePi.Longo from Sai Gon, Viet Nam (Worship-flowers shop Uploaded by Ekabhishek) [CC-BY-SA-2.0 (http://creativecommons.org/licenses/by-sa/2.0)%5D, via Wikimedia Commons

 ஒரு நுகர்வோர் இறுதி பயன்பாட்டிற்க்காக நேரடியாக சிறிய அளவில் ஒரு ஒற்றை புள்ளியில் (வளாகங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை) இருந்து பொருட்களை விற்பனை செய்வது சில்லறை வணிகம் ஆகும் .

சில்லறை வியாபாரிகள்  ஒரு பொருள்  தயாரிப்பாளரிடம் இருந்தோ அல்லது ஒரு மொத்த வியாபாரியிடம்  இருந்தோ பொருட்களை லாப நோக்கில் விற்கிறார்கள். சில்லறை விற்பனையாளர்கள் விநியோக சங்கிலி என அழைக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு பகுதியாகும்.

சில்லறை விற்பனையை வெவ்வேறு விநியோக முறையிலோ , ஒவ்வொரு வீடாகவோ அல்லது பல சிறு கடைகளின் மூலமோ செய்ய முடியும்.