டெஸ்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் (Click & Collect)

TESCO Billing counters

TESCO Billing counters Picture courtesy: Eleventh Earl of Mar’s

இந்த பதிவில் டெஸ்க்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் பற்றி பார்ப்போம். மளிகை சாமான்களுக்கு மட்டும் இந்த வசதி இன்று வரை 180 ஸ்டோர்களில் கிடைப்பதாக தகவல்.

இது போன்ற வசதிகள் இந்தியாவில் உள்ள பிக் பஜார், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றவற்றில் கொண்டு வந்தால் நிறைய நேரத்தை சேமிக்கமுடியும். முக்கியமாக நீண்ட நேரம் க்யுக்களில் நிற்பதை தவிர்க்கலாம். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று இப்போது பார்க்கலாம்:

1. வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ரேக்வச்டுகளை ஒருங்கிணைத்து அதற்கு தகுந்தாற்போல் பொருட்களை ஒழுங்குபடுத்தவேண்டும்.

2. பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர் வந்து வாங்கவிட்டால் அதற்க்கான கால நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. வாடிக்கையாளரின் ஆர்டரில் சில பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டியதாக இருக்கும் (ஏ.கா: காய்கறிகள், முட்டை, போன்றவை)

4. வாடிக்கையாளரின் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இட வசதி இருக்க வேண்டும்.

5. வாடிக்கையாளரின் ஆர்டரில் உள்ள பொருட்களும் பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களும் சரியாக இருக்கிறதா என்பதற்கான கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

CPG – நுகர்வோருக்காக தொகுக்கப்பட்ட பொருட்கள்

ஒரு வகை சராசரி நுகர்வோர் மூலம் ஒவ்வொரு நாளும் நுகரப்படும் பொருட்களை நாம் CPG(Consumer Packaged Goods) என்றழைக்கலாம்.  இந்த மாதிரியான பொருட்களை நுகர்வோர்கள் தினந்தோறும் அல்லது மிக குறுகிய நாட்களிலோ அல்லது வாரங்களிலோ செலவழித்துவிடுவார்கள். இந்த மாதிரியான  பொருட்களுக்கு துணிமணிகள், பேஸ்ட், சோப்பு , உணவு மற்றும் குளிர்பான வகைகளை கூறலாம்.

GS1 என்ற நிறுவனம் அமெரிக்காவில் CPG தரநிலைகளை வகுத்துள்ளது. இது CPG நிறுவங்களையும் பலசரக்கு ஸ்டோர்களையும் ஒன்றிணைக்க தேவையனவற்றை செய்கிறது. CPG நிறுவனங்கள் தங்களுடைய நுகர்வோர் தளத்தினை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.

UPC என்றால் என்ன ?

UPC – universal  product  code யுனிவர்சல் தயாரிப்பு கோட் (யூ.பீ. சி) பரவலாக அமெரிக்காவில், கனடா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட வகை பார்கோடு குறியியல்  ஆகும். கடைகளில்  வர்த்தக பொருட்களின்  தடமறிதல் பணயில் பயன்படுத்தப்படுகிறது.

பொருள் மற்றும் பொருள் விற்கும் விற்பனையாளர் இருவருக்கும் சில்லறை விற்பனையில் தனி அடையாளத்திற்காக ஒதுக்கப்படும் ஒரு தனிப்பட்ட 12 இலக்க எண்.யூ.பீ. சி பொதுவாக அதன் பார்கோடு அருகில் தோன்றும்.

ஈ.ஏ. / யூ.பீ. சி பயன்கள்:

1. அனைத்து பொருட்கள் ஒழுங்காக விற்பனை செயவதற்காக எந்த கட்டத்திலும்  அடையாளம் உறுதி செய்யவதற்காக 

2. வேகமாக  தரவு சேகரிப்பு

3. தரவினை வர்த்தக கூட்டாளிகள் மூலம் பயன்படுத்த முடியும்

By barcoderobot.com (http://www.barcoderobot.com/upc-a/036000291452/) [Public domain], via Wikimedia Commons