விநியோக மையம் அல்லது டிஸ்டிரிபுயூசண் சென்டர்

விநியோக மையம் அல்லது டிஸ்டிரிபுயூசண் சென்டர் என்பது சில்லரை விற்பனையாளர் அல்லது  மொத்த விற்பனையாளருக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களை சேமித்து வைத்திருக்கும் இடமாகும்.

ஒரு பெரிய விநியோக மையம் சுமார் 10 ஆயிரம் லாரிகளில் உள்ள சர்க்குக்களை தேக்கி வைக்கும் அளவிற்கு பெரிய இடத்தினை கொண்டிருக்கலாம். இவை ஐம்பதாயிரம் சதுர அடி முதல் மூன்று மில்லியன் சதுர அடி வரை இருக்கும்.

முக்கியமாக பின்வரும் விதத்தில் விநியோக மையம் முக்கியத்துவம் பெறுகிறது:

  1. இருப்பினை சரியான அளவுகளில் வைத்திருப்பதர்க்காக (balance inventory)
  2. சரியான நேரத்தில் மறுநிரப்பல் (replenishment)
  3. இடத்தினை சரியாக பயன்படுத்துதல் (conserve space)
  4. விநியோக மையத்தில் திறமையான செயலாக்கம் இறுதி பயனருக்கு  வழங்கப்படும் பொருளின் இறுதி விலையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். (efficient processing in DC can impact the final cost of the product to the consumer)
Advertisements

ரீடெயிலில் EDI

EDI என்பது Electronic Data Interchange என்பதன் சுருக்கமாகும். இது இரு கணிப்பொறி பயன்பாட்டு மென்போருள்களுக்கிடையே ஏற்ப்படுத்தப்படும் தகவல் பரிமாற்று முறை. ஒரு ரீடைல் நிறுவனமும் அதற்கு பொருட்கள் தயாரித்து விநியோகம் செய்யும் உற்பத்தியாளரும் மின்னணு முறையில் பிசினஸ் பரிவர்த்தனைகள் செய்யும் முறையாகும்.

இதனை மூன்று  முக்கிய செயல்களுக்காக பயன்படுத்தலாம் அவை:

Image

  1. Computer-to-Computer: ஒரு கணிப்பொறியில் இருந்து இன்னொரு கணிப்பொறிக்கு நேரடியாக தகவல் அனுப்பும் முறை.
  2. தரவுகளை பிசினஸ் மூலம் ரூட் செய்வது:  பர்சேஸ் ஆர்டர், இன்வோய்ஸ் போன்ற கோப்புகளை இரண்டு நிருவனங்களுக்கிடையே அனுப்புதல். ஆனால் இதனை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய கோப்புகளை அனுப்ப பயன்படுத்த முடியாது.
  3. தரமான தரவு வடிவம்:  தரமான தரவு வடிவத்தினை கொண்டிருப்பதால் இரு வேறு புள்ளிகளில் தரவினை ப்ராசெஸ் செய்வது எளிதாகிறது. ஆனால் தரமில்லாத அல்லது நிலையிள்ளாத தரவு வடிவங்களை நாம் பயன்படுத்த முடியாது.

பெரும்பாலும் நிறுனங்கள் ANSI ASC X12 ஸ்டாண்டர்ட் பயன்படுத்துகின்றன. நாம் இனிவரும் பதிவுகளில் ரீடெயில் நிறுவனங்களில் EDI எவ்வாறு செயல்படுகிறது என்று பாப்போம்.

பாரதி வால்மார்ட் நிறுவனங்களின் பிரிவு

Image

பாரதி மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுக்கிடையேயான உறவு முறிந்து 24 மணி நேரம் ஆன நிலையில் நாம் இதனை பற்றி என்னுடைய கருத்துக்கள்.

$400 பில்லியன் அளவுக்கு உள்ள இந்த ரீடைல் மார்க்கெட்டில் 1௦௦௦௦ பேருக்கு மேல் வேலை வாய்ப்புக்களை அளித்திருக்கும் இந்த கூட்டணி மேலும் பல வேலைவாய்ப்புக்களை தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இது வெளிநாட்டில் இருந்து பணத்தை முதலிடு செய்பவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்காது. இந்த முடிவு மற்ற சிறு ரீடைல் நிறுவங்களுக்கு புது உத்வேகத்தையும் தெம்பையும் தரும்.

இப்போதுள்ள சூழலில் வால்மார்ட் நிறுவனமானது அரசுத்துறையுடன் பேச்சு நடத்தி பொருட்களை சோர்ஸ் செய்யும் விதிமுறைகளை தளர்த்துவது பற்றி பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வால்மார்ட் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு அரசின் கொள்கை முடிவுகளே காரணம் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ ஏற்கனவே வால்மார்ட் நிறுவனத்திற்கு இருக்கும் எதிர்ப்பு பாரதி நிறுவனத்திற்கும் இருந்த நிலையில் இந்த ஒரு பிரிவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் நல்லது.

QR கோட் பயன்பாடுகள் ?

QR கோட் என்பது குய்க் ரேஸ்பான்ஸ்(QUICK RESPONSE)  என்பதை குறிக்கும். டோயோடோ குழுமத்தை சேர்ந்த டென்சோ வேவ் (Denso wav) 1994 இதனை கண்டுபிடித்தார்.

இதை பற்றி அறிய இந்த பதிவு இருப்பதால் அதனை மேற்கோள் கட்டி இந்த பதிவினை தொடங்குகின்றேன்.

QR கோட் என்பது ஒரு குறியீட்டு முறை என்பதை அறிந்திருப்பீர்கள்,  அது பற்றிய சில பயன்பாடுகளை இந்த பதிவில் பார்ப்போம்.

  1. மேசிஸ் (Macys) நிறுவனம் QR கோடினை பயன்படுத்தி வடிக்கையாளருக்கு தேவையான குறிப்புகளையும், லேட்டஸ்ட் ட்ரண்டுகளையும், அறிவுரைகளையும் அவர்களுக்கு பிடித்தமான ஸ்டைலிஸ்ட்கலிடமிருந்து அனுப்புகிறது.
  2. JCபென்னி (JCPenny ) நிறுவனம் 2011ல் கிறிஸ்துமஸ் பொழுது பரிசுப்பொருட்கள் வாங்கும் அனைவரும் QR கோட் மூலம் ஒரு தனிப்பட்ட வாழ்த்து செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.
  3. கொரியாவின் மக்கள் உலகிலேயே சிறந்த உழைப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நேரம் மிகவும் முக்கியம் (நமக்கில்லையா? 🙂 ) இதனை புரிந்துகொண்ட டெஸ்கோ நிறுவனம் QR கோடினையும் ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்தி அவர்களது ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்கியது. இதற்க்கு பல்வேறு போது இடங்களில் பொருட்கள் மற்றும் அதனுடைய QR கோட்களை வைத்து அதன்மூலம் அவர்கள் ஆர்டர் செய்யும் உத்தி அவர்களுக்கு நல்ல பயனை தந்தது.

டெஸ்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் (Click & Collect)

TESCO Billing counters

TESCO Billing counters Picture courtesy: Eleventh Earl of Mar’s

இந்த பதிவில் டெஸ்க்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் பற்றி பார்ப்போம். மளிகை சாமான்களுக்கு மட்டும் இந்த வசதி இன்று வரை 180 ஸ்டோர்களில் கிடைப்பதாக தகவல்.

இது போன்ற வசதிகள் இந்தியாவில் உள்ள பிக் பஜார், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றவற்றில் கொண்டு வந்தால் நிறைய நேரத்தை சேமிக்கமுடியும். முக்கியமாக நீண்ட நேரம் க்யுக்களில் நிற்பதை தவிர்க்கலாம். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று இப்போது பார்க்கலாம்:

1. வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ரேக்வச்டுகளை ஒருங்கிணைத்து அதற்கு தகுந்தாற்போல் பொருட்களை ஒழுங்குபடுத்தவேண்டும்.

2. பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர் வந்து வாங்கவிட்டால் அதற்க்கான கால நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. வாடிக்கையாளரின் ஆர்டரில் சில பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டியதாக இருக்கும் (ஏ.கா: காய்கறிகள், முட்டை, போன்றவை)

4. வாடிக்கையாளரின் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இட வசதி இருக்க வேண்டும்.

5. வாடிக்கையாளரின் ஆர்டரில் உள்ள பொருட்களும் பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களும் சரியாக இருக்கிறதா என்பதற்கான கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

CPG – நுகர்வோருக்காக தொகுக்கப்பட்ட பொருட்கள்

ஒரு வகை சராசரி நுகர்வோர் மூலம் ஒவ்வொரு நாளும் நுகரப்படும் பொருட்களை நாம் CPG(Consumer Packaged Goods) என்றழைக்கலாம்.  இந்த மாதிரியான பொருட்களை நுகர்வோர்கள் தினந்தோறும் அல்லது மிக குறுகிய நாட்களிலோ அல்லது வாரங்களிலோ செலவழித்துவிடுவார்கள். இந்த மாதிரியான  பொருட்களுக்கு துணிமணிகள், பேஸ்ட், சோப்பு , உணவு மற்றும் குளிர்பான வகைகளை கூறலாம்.

GS1 என்ற நிறுவனம் அமெரிக்காவில் CPG தரநிலைகளை வகுத்துள்ளது. இது CPG நிறுவங்களையும் பலசரக்கு ஸ்டோர்களையும் ஒன்றிணைக்க தேவையனவற்றை செய்கிறது. CPG நிறுவனங்கள் தங்களுடைய நுகர்வோர் தளத்தினை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.

UPC என்றால் என்ன ?

UPC – universal  product  code யுனிவர்சல் தயாரிப்பு கோட் (யூ.பீ. சி) பரவலாக அமெரிக்காவில், கனடா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட வகை பார்கோடு குறியியல்  ஆகும். கடைகளில்  வர்த்தக பொருட்களின்  தடமறிதல் பணயில் பயன்படுத்தப்படுகிறது.

பொருள் மற்றும் பொருள் விற்கும் விற்பனையாளர் இருவருக்கும் சில்லறை விற்பனையில் தனி அடையாளத்திற்காக ஒதுக்கப்படும் ஒரு தனிப்பட்ட 12 இலக்க எண்.யூ.பீ. சி பொதுவாக அதன் பார்கோடு அருகில் தோன்றும்.

ஈ.ஏ. / யூ.பீ. சி பயன்கள்:

1. அனைத்து பொருட்கள் ஒழுங்காக விற்பனை செயவதற்காக எந்த கட்டத்திலும்  அடையாளம் உறுதி செய்யவதற்காக 

2. வேகமாக  தரவு சேகரிப்பு

3. தரவினை வர்த்தக கூட்டாளிகள் மூலம் பயன்படுத்த முடியும்

By barcoderobot.com (http://www.barcoderobot.com/upc-a/036000291452/) [Public domain], via Wikimedia Commons