நுகர்வோர் பொருட்கள் வகைகள்

நுகர்வோர் பொருட்கள் வகைகள்" என்பது தமிழில் "Consumer goods categories" என்று அர்த்தமாகும். இது நுகர்வோர் பொருட்களின் பல்வேறு வகைகளைக் குறிக்கிறது. நுகர்வோர் பொருட்கள் என்பவை பொதுவாக நிரந்தரமான அல்லது குறைந்த கால உபயோகத்திற்கான பொருட்களாகும். இவை உணவுப் பொருட்கள், அலங்கார பொருட்கள், மின்சார சாதனங்கள், வீட்டு பொருட்கள், மற்றும் உடைகள் போன்றவை ஆகியவற்றை உள்ளடக்கும். நுகர்வோர் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் பொருட்களின் பெரும்பாலானவை இந்த வகைகளில் அடங்கும்.

நுகர்வோர் பொருட்களை வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் மெதுவாக நகரும் நுகர்வோர் பொருட்கள் என வகைப்படுத்தலாம்.

வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்(Fast Moving Consumer Goods):
பால், கம், பழங்கள் மற்றும் காய்கறிகள்: இவை தினசரி உணவு பொருட்கள் ஆகும், அவை அடிக்கடி வாங்கப்படும் மற்றும் விரைவாக உபயோகிக்கப்படும்.

டாய்லெட் பேப்பர்: இது ஒரு அவசியமான உபயோக பொருள் ஆகும், அது வீட்டில் எப்போதும் கிடைக்க வேண்டியது.

சோடா, பீர்: இவை விருந்து அல்லது ஓய்வு நேரங்களில் உபயோகிக்கப்படும் பானங்கள் ஆகும்.

ஆஸ்பிரின் மற்றும் மருந்துகள்: இவை சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகும்.

மெதுவாக நகரும் பொருட்கள் (Slow Moving Consumer Goods):
மெதுவாக நகரும் பொருட்கள் (Slow Moving Consumer Goods) என்பவை அரிதாக மாற்றப்படும், நீண்ட காலம் உபயோகிக்கப்படும் பொருட்களாகும். இவை பொதுவாக உயர் மதிப்புள்ளவை மற்றும் தரமானவை ஆகும்.


இதனால், இவை அடிக்கடி வாங்கப்படுவதில்லை மற்றும் விற்பனையில் மெதுவாக நகரும். மெதுவாக நகரும் பொருட்களின் சில உதாரணங்கள் பின்வருமாறு:

மின்சார சாதனங்கள் (Electrical Appliances):
* தொலைக்காட்சிகள் (Television)
* பிரிட்ஜ் (Refrigerator)
* ஏர் கண்டிஷனர் (Air Conditioner)

வீட்டு அலங்கார பொருட்கள் (Home Furnishing Items):
* சோபா செட்டுகள் (Sofa Sets)
* படுக்கை (Beds)
* மேஜைகள் (Tables)

பெரிய மின்னணு உபகரணங்கள் (Large Electronic Devices):
* வாஷிங் மெஷின்கள் (Washing Machines)
* ஓவன்கள் (Ovens)

இவை அனைத்தும் உயர் மதிப்புள்ளவை, அவை அதிக காலம் தாங்கும் மற்றும் அவற்றின் மாற்று அவசியம் அரிதாக உள்ளது.

உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்தும் ONDC

ONDC என்ற நிறுவனம் பெங்களூருவிலிருந்து செயல்படுகிறது. இது ஓபன் நெட்ஒர்க் போர் டிஜிட்டல் கமெர்ஸ் (Open Network for Digital Commerce) இது இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் என்னவென்றால் இ-காமெர்ஸ் ஜனநாயக ரீதியாக செயல்படுத்தப்படவேண்டும் என்பதே ஆகும். இது தற்போது 70% இ-காமெர்ஸ் வணிகம் பிளிப்கார்ட்மற்றும் அமேசான் நிறுவனங்களில் நடைபெறுகிறது. இதனை மாற்றும் ஒரு முயற்சியாகும்.

ஒண்டசி (ONDC) இது சிறு வியாபரிகளையும் மற்றும் ப்ரண்ட்கலை வெளிக்கொணரவும் அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வழங்குகிறது. மின் வணிகத்தை மேலும் உள்ளடக்கியதாகவும், நுகர்வோருக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறு குறு நிறுவனங்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது.

எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டாக எனக்கு அருகில் இருக்கும் ஜெய் மெகா மார்ட் என்னும் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பொருட்களை கிராபிட்ஸ்வில்லவில் வாங்கும் வசதிகளை இது ஏற்படுத்தி கொடுக்கிறது.

மெட்ரிக் : கார்ட் டு கன்வெர்சன்

ஷாப்பிங் கார்ட் கன்வெர்ஷன் ரேட் மெட்ரிக், வாடிக்கையாளர்களால் தொடங்கப்பட்ட மொத்த வணிக கார்ட் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது முழுமையான ஆர்டர்களின் எண்ணிக்கையை அளவிட உதவுகிறது. இது பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் ஆன்லைன் ஸ்டோரின் திறனை அளவிட பயன்படும் இணையவழி அளவீடு ஆகும்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வழிமுறைகளை கடந்து செல்வார்கள்:
1) கார்ட்டில் சேர்
2) செக்அவுட் பக்கம்
3) பணம் செலுத்தும் பக்கம்
4) இருப்பிடப் பக்கம் (மல்டி-அவுட்லெட் பிராண்டுகளுக்கு)

இதன் காரணமாக வாடிக்கையாளர் எந்த சாத்தியமான படியிலும் வாங்கும் யோசனையை கைவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும், மேலும் கார்ட் கன்வெர்ஷன் ரேட் மெட்ரிக்கை பாதிக்கும்.

கியூஎஸ்ஆர்(QSR) அப்படின்னா என்ன ?

கியூஎஸ்ஆர் குவீக் சர்வீஸ் ரெஸ்டோரன்ட் என்பது குறைந்த நேரத்தில்.உணவுகளை தயாரித்து கொடுக்கும். நிறுவனமாகும்.  பொதுவாக அவை  துரித உணவு உணவகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.QSRகள் கருத்தாக்கங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள் பர்கர்கள், காபி, ஐஸ்கிரீம்கள்.

பொதுவாக, விரைவு சேவை உணவகங்கள் அல்லது கியூஎஸ்ஆர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட மெனுவில் துரித உணவு பொருட்களை வழங்குகின்றன, ஏனெனில் அவை குறைந்த சாத்தியமான மாறுபாட்டுடன் குறைந்த நேரத்தில் தயாரித்து கொடுக்கும். தயாரிப்பு முறை மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒரு விரைவு சேவை உணவகத்தின் (QSR) தூண்களாகும்.

அத்தகைய QSR க்கான எடுத்துக்காட்டுகள்: மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி, டாகோ பெல், வெண்டிஸ் போன்றவை ஆகும்.

வெள்ளை லேபிள் (White Label) என்றால் என்ன ?

வெள்ளை லேபில் என்பது  ஒரு மூன்றாவது நிறுவனம் ஒரே மாதிரியான தயாரிப்புகளை தயாரித்து வெவ்வேறு பிராண்டுகளின் பெயர்களின் விற்பனை செய்யும் ஒரு முறையாகும். அது விற்பனை செய்யும் பொழுது சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.

பல்வேறு துறைகளில் ஒயிட் லேபிலிங் அல்லது வெள்ளை லேபில் முறையை நாம் பார்க்க முடியும்.  எடுத்துக்காட்டாக காபி அதிக அளவில் ரோஸ்ட் செய்யப்பட்டு வெவ்வேறு பேட்சஸ் ஆக பேக் செய்யப்பட்டு பின்பு வெவ்வேறு பிராண்டாக விற்பனை செய்யப்படுகிறது இதில் ரோஸ்ட் செய்யப்படும் காபி கொட்டையானது தர  நிர்ணயங்களின் அடிப்படையிலோ அல்லது சிறு மாற்றத்தினாலோ அதன் விலையில் அல்லது பிராண்டில் மாற்றங்களை ஏற்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு பொருளை தயாரித்து ஒரு ஹோல்சேலரிடமோ அல்லது ஒரு சில்லறை வணிக நிறுவனத்திடமோ மொத்தமாக விற்பனை செய்து விடும் அல்லது தயாரித்து அனுப்பும் அந்நிறுவனம் அதனை வெவ்வேறு பெயரிலோ அல்லது வெவ்வேறு பிராண்டுகள் மூலமும் சில்லறை விற்பனைக்கு அனுப்பி விடும் இதன் மூலம் ஒரே பொருளை வெவ்வேறு வகையாக விற்பனை செய்து லாபத்தை ஈட்டுகின்றன.

ஆம்னிசேனல் வர்த்தகம் என்றால் என்ன?

சில்லறை வர்த்தகத்தில் ‘ஆம்னிசேனல் வர்த்தகம்’ என்ற சொல் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பதிவில் அதைப் பற்றி பார்ப்போம்.

ஆம்னி சேனல் (Omni Channel) என்பது  வாடிக்கையாளர்களை பல்வேறு விதமான விற்பனை  விற்பனை சேனல்கள் மூலம் வியாபாரம் செய்ய முற்படுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் இதை யூனிஃபேட் காமர்ஸ் என்றும் அழைக்கிறார்கள்.

முற்காலங்களில் நாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் ஒரு கடைக்கு செல்வோம் அங்கே வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தினை அங்கிருக்கும்  பில்லிங்  கவுண்டரில் பே செய்துவிட்டு  வந்துவிடுவோம்.  அல்லது நாம் ஒரு வெப்சைட் மூலம் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான பேமென்ட் கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டெலிவரி  செய்யும் பொழுதும் பே  செய்து விடுவோம்.

சில்லரை நிறுவனத்தில் வியாபாரம் நடக்க வேண்டும் என்றால் அது திறந்திருக்கும் நேரங்களில் மட்டுமே  சாத்தியப்பட்டதாக இருக்கும். அதற்கு  வேலையாட்கள்,  மின்சார பயன்பாடுகள்,  வாடகை  மற்றும் இதர செலவுகள் ஆகும்.  இதுவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம்  ஒரு  ஒரு சில்லறை நிறுவனமானது  தனது தொழிலை 24 மணி நேரமும் நடத்த இயலும்.  மேலும் பல்வேறு வழிகளில் தனது வியாபாரத்தை பெருக்க இயலும்.

எடுத்துக்காட்டாக நான் ஒரு வேக்கம் கிளீனர் வாங்க வேண்டும் என்றால் இணையத்தில் தேடி  பல்வேறு பிராண்டுகளில்  பல வகைகளில் தேவையான ஆய்வுகளை செய்வேன்.  இந்நிலையில் சில்லரை  நிறுவனமானது தனது  டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம்  தனது  பொருட்களை முன்னிலைப்படுத்துகின்றன.   நான் பின்பு ஏதேனும் ஒரு பொருளை முடிவு செய்து ஆன்லைனிலேயே  ஆர்டர் செய்கிறேன் அதற்கு பேய் மட்டும் செய்து விடுகிறேன்.  இந்த ஆர்டர் ஆனது  சில்லறை நிறுவனத்தில் சென்று  பின்பு  கொரியர் நிறுவனம் மூலம் எனக்கு வந்து சேர்கிறது.  மேலும் அந்நிறுவனத்தின்  சேவை நிர்வாகிகள் எனது வீட்டுக்கு வந்து இன்ஸ்டால் செய்து டெமோ செய்து முடிக்கின்றார்கள்.  இதில் கவனித்தீர்கள் ஆனால் நாம் ஒரு ஸ்டோருக்கு செல்லாமலேயே பொருட்களை வாங்கி அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் போல பல வகைகளில் ஆம்னி சேனல் முறைகள் இப்பொழுது பயன்பாட்டில் உள்ளன.

ரீடெயிலில் EDI

EDI என்பது Electronic Data Interchange என்பதன் சுருக்கமாகும். இது இரு கணிப்பொறி பயன்பாட்டு மென்போருள்களுக்கிடையே ஏற்ப்படுத்தப்படும் தகவல் பரிமாற்று முறை. ஒரு ரீடைல் நிறுவனமும் அதற்கு பொருட்கள் தயாரித்து விநியோகம் செய்யும் உற்பத்தியாளரும் மின்னணு முறையில் பிசினஸ் பரிவர்த்தனைகள் செய்யும் முறையாகும்.

இதனை மூன்று  முக்கிய செயல்களுக்காக பயன்படுத்தலாம் அவை:

Image

  1. Computer-to-Computer: ஒரு கணிப்பொறியில் இருந்து இன்னொரு கணிப்பொறிக்கு நேரடியாக தகவல் அனுப்பும் முறை.
  2. தரவுகளை பிசினஸ் மூலம் ரூட் செய்வது:  பர்சேஸ் ஆர்டர், இன்வோய்ஸ் போன்ற கோப்புகளை இரண்டு நிருவனங்களுக்கிடையே அனுப்புதல். ஆனால் இதனை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய கோப்புகளை அனுப்ப பயன்படுத்த முடியாது.
  3. தரமான தரவு வடிவம்:  தரமான தரவு வடிவத்தினை கொண்டிருப்பதால் இரு வேறு புள்ளிகளில் தரவினை ப்ராசெஸ் செய்வது எளிதாகிறது. ஆனால் தரமில்லாத அல்லது நிலையிள்ளாத தரவு வடிவங்களை நாம் பயன்படுத்த முடியாது.

பெரும்பாலும் நிறுனங்கள் ANSI ASC X12 ஸ்டாண்டர்ட் பயன்படுத்துகின்றன. நாம் இனிவரும் பதிவுகளில் ரீடெயில் நிறுவனங்களில் EDI எவ்வாறு செயல்படுகிறது என்று பாப்போம்.

பாரதி வால்மார்ட் நிறுவனங்களின் பிரிவு

Image

பாரதி மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுக்கிடையேயான உறவு முறிந்து 24 மணி நேரம் ஆன நிலையில் நாம் இதனை பற்றி என்னுடைய கருத்துக்கள்.

$400 பில்லியன் அளவுக்கு உள்ள இந்த ரீடைல் மார்க்கெட்டில் 1௦௦௦௦ பேருக்கு மேல் வேலை வாய்ப்புக்களை அளித்திருக்கும் இந்த கூட்டணி மேலும் பல வேலைவாய்ப்புக்களை தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இது வெளிநாட்டில் இருந்து பணத்தை முதலிடு செய்பவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்காது. இந்த முடிவு மற்ற சிறு ரீடைல் நிறுவங்களுக்கு புது உத்வேகத்தையும் தெம்பையும் தரும்.

இப்போதுள்ள சூழலில் வால்மார்ட் நிறுவனமானது அரசுத்துறையுடன் பேச்சு நடத்தி பொருட்களை சோர்ஸ் செய்யும் விதிமுறைகளை தளர்த்துவது பற்றி பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வால்மார்ட் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு அரசின் கொள்கை முடிவுகளே காரணம் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ ஏற்கனவே வால்மார்ட் நிறுவனத்திற்கு இருக்கும் எதிர்ப்பு பாரதி நிறுவனத்திற்கும் இருந்த நிலையில் இந்த ஒரு பிரிவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் நல்லது.

QR கோட் பயன்பாடுகள் ?

QR கோட் என்பது குய்க் ரேஸ்பான்ஸ்(QUICK RESPONSE)  என்பதை குறிக்கும். டோயோடோ குழுமத்தை சேர்ந்த டென்சோ வேவ் (Denso wav) 1994 இதனை கண்டுபிடித்தார்.

இதை பற்றி அறிய இந்த பதிவு இருப்பதால் அதனை மேற்கோள் கட்டி இந்த பதிவினை தொடங்குகின்றேன்.

QR கோட் என்பது ஒரு குறியீட்டு முறை என்பதை அறிந்திருப்பீர்கள்,  அது பற்றிய சில பயன்பாடுகளை இந்த பதிவில் பார்ப்போம்.

  1. மேசிஸ் (Macys) நிறுவனம் QR கோடினை பயன்படுத்தி வடிக்கையாளருக்கு தேவையான குறிப்புகளையும், லேட்டஸ்ட் ட்ரண்டுகளையும், அறிவுரைகளையும் அவர்களுக்கு பிடித்தமான ஸ்டைலிஸ்ட்கலிடமிருந்து அனுப்புகிறது.
  2. JCபென்னி (JCPenny ) நிறுவனம் 2011ல் கிறிஸ்துமஸ் பொழுது பரிசுப்பொருட்கள் வாங்கும் அனைவரும் QR கோட் மூலம் ஒரு தனிப்பட்ட வாழ்த்து செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.
  3. கொரியாவின் மக்கள் உலகிலேயே சிறந்த உழைப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நேரம் மிகவும் முக்கியம் (நமக்கில்லையா? 🙂 ) இதனை புரிந்துகொண்ட டெஸ்கோ நிறுவனம் QR கோடினையும் ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்தி அவர்களது ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்கியது. இதற்க்கு பல்வேறு போது இடங்களில் பொருட்கள் மற்றும் அதனுடைய QR கோட்களை வைத்து அதன்மூலம் அவர்கள் ஆர்டர் செய்யும் உத்தி அவர்களுக்கு நல்ல பயனை தந்தது.