டெஸ்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் (Click & Collect)

TESCO Billing counters

TESCO Billing counters Picture courtesy: Eleventh Earl of Mar’s

இந்த பதிவில் டெஸ்க்கோவின் கிளிக் அண்ட் கலெக்ட் பற்றி பார்ப்போம். மளிகை சாமான்களுக்கு மட்டும் இந்த வசதி இன்று வரை 180 ஸ்டோர்களில் கிடைப்பதாக தகவல்.

இது போன்ற வசதிகள் இந்தியாவில் உள்ள பிக் பஜார், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றவற்றில் கொண்டு வந்தால் நிறைய நேரத்தை சேமிக்கமுடியும். முக்கியமாக நீண்ட நேரம் க்யுக்களில் நிற்பதை தவிர்க்கலாம். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று இப்போது பார்க்கலாம்:

1. வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ரேக்வச்டுகளை ஒருங்கிணைத்து அதற்கு தகுந்தாற்போல் பொருட்களை ஒழுங்குபடுத்தவேண்டும்.

2. பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர் வந்து வாங்கவிட்டால் அதற்க்கான கால நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. வாடிக்கையாளரின் ஆர்டரில் சில பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டியதாக இருக்கும் (ஏ.கா: காய்கறிகள், முட்டை, போன்றவை)

4. வாடிக்கையாளரின் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இட வசதி இருக்க வேண்டும்.

5. வாடிக்கையாளரின் ஆர்டரில் உள்ள பொருட்களும் பேக் செய்து சீல் செய்யப்பட்ட பொருட்களும் சரியாக இருக்கிறதா என்பதற்கான கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

Advertisements