QR கோட் பயன்பாடுகள் ?

QR கோட் என்பது குய்க் ரேஸ்பான்ஸ்(QUICK RESPONSE)  என்பதை குறிக்கும். டோயோடோ குழுமத்தை சேர்ந்த டென்சோ வேவ் (Denso wav) 1994 இதனை கண்டுபிடித்தார்.

இதை பற்றி அறிய இந்த பதிவு இருப்பதால் அதனை மேற்கோள் கட்டி இந்த பதிவினை தொடங்குகின்றேன்.

QR கோட் என்பது ஒரு குறியீட்டு முறை என்பதை அறிந்திருப்பீர்கள்,  அது பற்றிய சில பயன்பாடுகளை இந்த பதிவில் பார்ப்போம்.

  1. மேசிஸ் (Macys) நிறுவனம் QR கோடினை பயன்படுத்தி வடிக்கையாளருக்கு தேவையான குறிப்புகளையும், லேட்டஸ்ட் ட்ரண்டுகளையும், அறிவுரைகளையும் அவர்களுக்கு பிடித்தமான ஸ்டைலிஸ்ட்கலிடமிருந்து அனுப்புகிறது.
  2. JCபென்னி (JCPenny ) நிறுவனம் 2011ல் கிறிஸ்துமஸ் பொழுது பரிசுப்பொருட்கள் வாங்கும் அனைவரும் QR கோட் மூலம் ஒரு தனிப்பட்ட வாழ்த்து செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.
  3. கொரியாவின் மக்கள் உலகிலேயே சிறந்த உழைப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நேரம் மிகவும் முக்கியம் (நமக்கில்லையா? 🙂 ) இதனை புரிந்துகொண்ட டெஸ்கோ நிறுவனம் QR கோடினையும் ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்தி அவர்களது ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்கியது. இதற்க்கு பல்வேறு போது இடங்களில் பொருட்கள் மற்றும் அதனுடைய QR கோட்களை வைத்து அதன்மூலம் அவர்கள் ஆர்டர் செய்யும் உத்தி அவர்களுக்கு நல்ல பயனை தந்தது.

பின்னூட்டமொன்றை இடுக